இஸ்லாமிய அறிவகத்தின் அரபு தமிழ் அகராதி

இஸ்லாமிய அறிவகத்தின் அரபு தமிழ் அகராதி

இஸ்லாமிய அறிவகத்தின் அரபு தமிழ் அகராதி

1)அப்து – அடிமை.
2)அமீர் – ஒரு கூட்டத்தின் தலைவர்.
3)அதப் – ஒழுக்கம்.
4)அதாப் – வேதனை.
5)அன்பியா – நபியின் பன்மை.

6)அவ்லியா – வலியின் பன்மை.
7)அமத்து – பெண் அடிமை, காபிர்.
8)அமலஸாலிஹ் – நற்செயல்கள்.
9)அதான் – தொழுகைக்கு
அழைத்தல்.
10)அஸ்ஹாப் – ஸஹாபியின்
பன்மை.

11)அதா – உடனுக்குடன்
நிறைவேற்றுதல்.
12)அன்ஸாரிகள் – தீனுக்காக
ஹிஜ்ரத் செய்து
வந்தவர்களுக்கு உதவி
செய்தவர்கள். இது மதீனா
ஸஹாபிகளைக் குறிக்கும்.
13)அஜ்ல் – கூலி்.
14)அஜல் – முடிவு.
15)அன்புஸ் – ஆத்மாக்கள்.

16)அரfபா நாள் – துல்ஹஜ்
9 ம் நாள்.
17)அரfபாத் – மக்காவிற்கு
அருகில் உள்ள மைதானம்.
18)அவ்ரத் – மறைக்க வேண்டிய
உறுப்புகள்.
19)அய்யாமுத் தஷ்ரீக் –
துல்ஹஜ் 11,12,13 ம் நாட்கள்.
20)அமல் – செயல்.

21)ஆமீன் – அப்படியே ஆகட்டும்.
22)ஆலிம் – அறிந்தவர். (மார்க்க
அறிவைப் பெற்றவர்களுக்குக்
கூறப்படும்).
23)ஆபித் – வணக்கம் புரிபவர்.
24)ஆஷூரா – முஹர்ரம் மாதத்தின்
பத்தாம் நாள்.
25)ஆயத்து – அத்தாட்சி.

26)ஆகிரா – மறுமை.
27)ஆதாப் – ஒழுக்கங்கள்

28)இல்மு – அறிவு.
29)இஃலான் – அறிவிப்பு.
30)இமாம் – வழிகாட்டி, முன் நின்று
தொழுகையை நடத்தி
வைப்பவர்.
31)இமாமத் – கூட்டுத் தொழுகைக்கு
தலைமை வகிப்பது.
32)இகாமத் – தொழுகைக்கு உள்ள
அழைப்பு.
33)இகாமத் – பயணம் செல்லாமல்
ஊரில் தங்கியிருக்கும் நிலை.
34)இஹ்ராம் – ஹஜ்ஜின் போது
ஆடை அணியும் ஒரு முறை.
35) இஹ்ராம் – விலக்கிக் கொள்ளல்.

36)இஸ்திகாளா – பெண்களுக்கு
வியாதியால் ஏற்படும் இரத்தப்
போக்கு.
37)இஸ்திஃபார் – பாவமன்னிப்புத்
தேடல்.
38)இஷாரா – சைக்கினை.
39)இஃராபு – அரபு எழுத்துக்களுக்கு
உரிய உயிர்க் குறிகள்.
40)இஃதிகாfப் – பள்ளியில்
தவமிருத்தல்.
41)இத்தா – காத்திருத்தல்.
42)இப்னு – மகன்.
43)இப்லீஸ் – ஷைத்தான்களின்
தந்தை.
44)இஃலாஸ் – மனத தூய்மை.
45)இபாதத் – வணக்கம்.

46)இஸ்ஸத் – கண்ணியம்.
47)இக்ராம் – மரியாதை.
48)இஸ்ராfப் – வீண் விரயம்.
49)இல்ஹாம் – உதிப்பு.
50)இமாமுல் அஃளம் –
இமாம் அபூஹனீஃபா
(ரஹ்மத்துல்லாஹி அலைஹி).

51)ஈமான் – நம்பிக்கை.
52)ஈதுல் fபித்ரு –
நோன்புப் பெருநாள்.
53)ஈதுல் அள்ஹா –
ஹஜ்ஜுப் பெருநாள்.
54)ஈதுகாஹ் – பெருநாள்
தொழுகையை நிறைவேற்றும்
மைதானம்.
55)ஈஸால் தவாப் – நன்மையை
எத்தி வைத்தல்.

56)உலமா – ஆலிமின் பன்மை.
57)உம்மத் – சமுதாயம்.
58)உள்ஹிய்யா – ஹஜ் பெருநாளில்
விநியோகிக்கும் இறைச்சி.
59)உஷ்ரு – ஜகாத்தில் ஒரு வகை.
60)உளூ – அங்கத் தூய்மை.

61)கலீfபா – பிரதிநிதி.
62)கவ்ம் – சமுதாயம்.
63)கித்மத் – பணிவிடை செய்தல்.
64)காஜி – நீதிபதி.
65)குஸூஷி – விசேஷமான.

66)கீபத் – புறம் பேசுதல்.
67)குfப்பார் – காfபிரின் பன்மை.
68)குfபர் – நிராகரிப்பு.
69)கித்பு – பொய்.
70)குத்ரத் – வல்லமை.

71)கத்திப் – பிரசங்கம் செய்வர்.
72)காத்திப் – எழுத்தர்.
73)காரி – நன்றாக ஓதக் கூடியவர்
74)கிராஅத் – ஓதுதல்.
75)களா – பிற்படுத்துதல்.

76)கல்பு – இதயம்.
77)குலூப் – கல்பின் பன்மை.
78)கஷ்fபு – மறைவானவற்றை
அறிதல்.
79)கிஸ்ஸா – சரித்திரம்.
80)கஸஸ் – சரித்திரங்கள்.
விரைவில் பிடிஎஃப் வடிவில்(PDF)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Visit Us On FacebookVisit Us On Google PlusVisit Us On Youtube