நாம் பெறுவோமா? இழப்போமா?

நாம் பெறுவோமா? இழப்போமா?

நாம் பெறுவோமா? இழப்போமா? முடிவெடுக்க வேண்டியது நாம்தான்!!! —- —- — அவனி பிறந்த நாள்முதல் அண்ணலார் வரும் வரை அகிலம் கண்ட நபிமார்கள் அழியாப் புகழ் பெற்றனரே! அல்லாஹ்வின் மார்க்கம் தனை அணுகளவும் பிசகாது மண்ணில் அழகாகத் தந்திட நபிமார்கள் அளப்பெரும் உழைப்பு செய்தனரே! அருமை நாயகம் தனையே அத்தனை பேரும் ஒருசேர அருகருகே கண்டு மகிழ்ந்தனரே! அரியமிஃராஜ் நடக்கும் முன்னரே! அல்லாஹ்வின் சாந்தி அன்றாடம் அவர்கள் மீது பொழிவதாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!

ஆலிமே ஆலம்!

ஆலிமே ஆலம்!

ஆலிமே ஆலம்! ஆலமே ஆலிம்!! ஆதலின் ஆஷிப்போம்!!! மதிக்கு வானுண்டு! மலர்க்கு கொடியுண்டு! மக்களுக்கு யாருண்டு? இரைதர தாயுண்டு! இன்பம்தர உறவுண்டு! இல்முதர யாருண்டு? உலகுதர அரசுண்டு! உணர்வுதர அகிலமுண்டு! உண்மைதர யாருண்டு? சர்தாரும் முன்னில்லை! சஹாபாவும் நேரில்லை! சத்தியம்தர யாருண்டு? வலிகாணும் வழியில்லை! வான்கதவும் திறக்கவில்லை! வாரிசாக யாருண்டு? தன்னறிவுவரை தாயுண்டு! தோள்வரை தகப்பனுண்டு! தனிமைவரை யாருண்டு? மானிடா! மயங்காதே! மண்சீராக மனம்சிறப்பாக! மன்னவன்தந்த ஆலிமுண்டு! —- ஈரைந்து சுமந்ததாய் ஈரநினைவோடு தந்தை ஈடில்லா பருவவாழ்வு! எல்லாம் தான்விட்டு ஏகனறிவும் ஏந்தல்மொழியும் ஏந்திடச் சென்றார்! ஈரைந்து கற்றங்கே இளமைவிட்டு வெளிவந்தார் இறைப்பணி சுமந்தார்! வீட்டுக்கு விருந்தாளியானார் ஊருக்குப் பிள்ளையானார் வெளிவாழ்வும் தொடந்தார்! எண்ணித்தரும் ஹதியாவை எண்ணாமல் சேவைதந்தார் ஏந்தலின் வாரிசானார்! சமுதாய…

Read More Read More

அறிவகம் அழைக்கின்றது!

அறிவகம் அழைக்கின்றது!

அறிவகம் அழைக்கின்றது! இவ்வுலகு இருளில்… இல்முடையார் எங்கே? இல்மைப் பகிராத இஸ்லாமிய அறிவகம் எங்கே? இணையட்டும் உலகிற்காக இல்மும் அறிவகமும்! இறைக்காக இனியவர்க்காக இடையின்றி இயங்கட்டும் இம்மையின்றி மறுமைக்காக இக்லாஸாக இயங்கட்டும்!!. இதுதான் மார்க்கமென இடம்பெயர் போலியும் இதுக்குள்தான் மார்க்கமென இடர்தரும் போதையும் இனியவிளக்கம் பெற இயங்கட்டும் இக்லாஸாக…!!! —– ——

ரஜப்

ரஜப்

சீர்மிகு ரஜப் மாதத்தில்தான்… @நமது கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அன்னை ஆமீனா அவர்களின் திருவயிற்றில் கருவானார்கள். @நபிகளாரின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அற்புத மிஃராஜ் நடந்தது. (கி.பி.621/02/22, ஞாயிறு). @நமது நபி நூஹ் அவர்களின் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்) கப்பல், தன் பயணத்தைத் தொடங்கியது. இம்மாதம் பிறை 12 ல் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்களும், பிறை 18 ல் இமாம் அபூஹனீஃபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களும் காலமானார்கள்.

எக்காலம்?

எக்காலம்?

எக்காலம்? யாம் பெற்றத் தெளிவு நீ பெறுவ தெப்போ? நீ கொண்டப் போதையில் நான் மிதந்தே னப்போ! பூம்பூம் மாடா சுத்துறே 6 ஐயும் 8 ஐயும் கத்துறே! மாநபியை மறக்க நினைக்குறே மாநகரப் பேச்சையே நம்புறே! குர்ஆனைக் கீழே வச்சுட்ட கப்ஸாக் கிதாபை நீதூக்கிட்ட! ஸனதை மதிக்க மறந்துட்ட சாதாவா நினைக்கப் பழகிட்ட! மத்ஹப முகமூடியா போட்டிருக்க மாற்றுக் கொள்கைய வச்சிருக்க! இஸ்லாத்தில் இல்லா சாதிய இதயத்தில் நிரப்பி யிருக்க! கோஷத்தால் கெட்டதக் கூட்டம் கோலத்தால் கெடுக்குதுன் கூட்டம்! பூனைக்கு மணி கட்டமுடியாதுனு பூரிப்பு அடஞ்சுத் திரியுறே! எத்தனும் பித்தனும் ். தெளிந்திட ஏத்த மருந்திருக்கு இக்காலம்!

முத்துக்கள் மூன்று

முத்துக்கள் மூன்று

இஸ்லாமிய அறிவகத்தின்முத்துக்கள் மூன்று. 1. அல்குர்ஆன் : “எவர்கள் (நம்மை) நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினார்களோ அத்தகையவர் நரகவாசிகளாவர். @ ஸூராத்துல் மாயிதா/ஆயத்10. —– —– —- 2. அல்ஹதீஸ் : இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் : ” கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்” அறிவிப்பவர் : ஹுதைபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். (முஸ்லிம் 168). —– —– —– 3. துஆ : ஒரு கூட்டத்தார் குறித்து அஞ்சும்போது… யா அல்லாஹ்! இவர்களை விட்டும் நீ எனக்குப் போதுமாகிவிடு; நீ விரும்பிய ஒன்றைக் கொண்டு! (முஸ்லிம் பாகம் 4, பக்கம் 2300).

புறப்படுங்கள் மஹல்லாவை நோக்கி …!

புறப்படுங்கள் மஹல்லாவை நோக்கி …!

இதோ மேல்விஷாரம் வழிகாட்டுகின்றது…! புறப்படுங்கள் மஹல்லாவை நோக்கி …! கோடி படைப்பிருக்க மனிதனாகப் பிறந்தோம்! சமயம்பல இருக்க சத்திப்பாதையில் பிறந்தோம்! ஆதம்நபி தொட்டு ஈஸாநபிவரை உம்மத்து பிறந்திருக்க உத்தமநபி உம்மத்தாக உலகில் பிறந்தோம்! பிறந்தோமா? சுயமாகவா? இல்லை; இல்லவே இல்லை! பிறப்பும் இறப்புமில்லா(த) ரப்பின் பெருங் கருணையால்! அவனுக்கு அடிபணிய வேண்டாமா? சத்திய மார்க்கத்திற்கு சேவகம் செய்ய வேண்டாமா? புறப்படுங்கள்… மஹல்லா நோக்கி பொது சிவில் சட்டத்தை புறந்தள்ளிட பம்பரமாக சுழன்று பணிபுரிக…!

ஒரு சொல் கேளீர்!

ஒரு சொல் கேளீர்!

அரைகுறைப் பிறவி களும் ஆதாரப் பேய் களும் ஆதாயம் தேடி யிங்கே அலையுது அறிவீரோ? மார்க்கத்தில் கை வைத்து மனப்போக்கில் பொய்கலந்து மண்ணுலகில் பரப்பி தன் மடிவளர்ப்பதை உணர்வீரோ?. நபிவழி நற்சஹாபா வழி நல்லடியாராம் வலி வழி நன்கறிந்த இமாம் வழி நானிலம் நடக்கும்நம் வழி! ஆலிம்கள் சொல்லக் கேட்டு ஆமன்னா ஸல்லம்னா என்றே அகம்ஐம் புலன்வழி வாங்கி அறவழி வாழும்வழி நம்வழி! அர்ஸும் குர்ஸும் தாங்கும் அண்ணலார் பொற்ப் பெயரை அடிமடையர் வாய்க்கால் மேலே அச்சிடும் கொடுமைக் கண்டீரோ?. இருப்பதை எல்லாம் மறுக்க இல்லாததை எல்லாம் திணிக்க இருகொம் பில்லா தலைமைக்கு இவரடிமை இவரறியாக் கொடுமை! எதுஎவர் சொல்லினும் ஏற்காது எம்வழி எமதருருமை உலமா எமக்குக் காட்டும் வழியென எண்ணிநட சுவனம்…

Read More Read More

வெற்றியா? வெறுமையா?

வெற்றியா? வெறுமையா?

நினைச்சதெல்லாம் நடக்குது தாண்டவக் கோனே! நாம நினைக்காததும் நடக்கனும் தாண்டவக் கோனே! நம்ம விழிப்பும் உறக்கமும் தாண்டவக் கோனே! அட! மூச்சும் பேச்சும் தாண்டவக் கோனே…! சமுதாயச் சிந்தையிலே மூழ்கனும் தாண்டவக் கோனே! ஆலிம்களை சுமக்கனும் தாண்டவக் கோனே! அவுக அறிவை சுரக்கனும் தாண்டவக் கோனே! அதை அகிலமெலாம் தரனும் தாண்டவக் கோனே! முட்டாப் பயலெல்லாம் தாண்டவக் கோனே! இங்கே வைலண்டா மார்க்கம் பேசுறான் தாண்டவக் கோனே! போலி தௌஹீத் கூட்டமது* தாண்டவக் கோனே! அது மொட்டைமாடி ஆய்வில ஆணியப் புடுங்கியது போதும் தாண்டவக் கோனே! அது அடங்கி ஒடுங்கனும் தாண்டவக் கோனே! ஊமைக் கூட்டமொன்னு தாண்டவக் கோனே! இங்கே சைலண்டா குழப்பம் விதைக்குது தாண்டவக் கோனே! போதை தப்புலீக் கூட்டமது தாண்டவக்…

Read More Read More

கவிக்கோ கரைந்தார்

கவிக்கோ கரைந்தார்

கவிக்கோ கரைந்தார் காலத்தின் சுவடில்…! புனித ரமலானின் முதல் வெள்ளியில் தமிழ் வானின் முக்கிய வெள்ளி உதிர்ந்தது! பிறப்பு மதுரை மண்ணில் இருப்பு வேலூர் மண்ணில் இறப்பு கோடி இதயங்களில் இறப்பல்ல; அது இதயங்களில் இணைந்தது! வாணியம்பாடி வானம்பாடி வற்றா(த) ஜீவநதி வலிமைமிகு கற்பனைகவி புதுக்கவியின் பிதாமகன் பெயர்ந்தது! சிரித்த முகம் சீரியச் சிந்தனை அகம் மாற்றாரும் மதித்த ரகம் மத்தாப்பூக் கவிதை சுகம் மறைந்தது! கஜல் ஹைக்கூவை இரு தோள்களில் ஏந்தி கன்னித்தமிழ் நாட்டில் இரைத்த காவியத் தலைமை கரைந்தது! தமிழ்த் துறைத் தலைவர் தமிழ்நாடு வக்புவாரியத் தலைவர் குறியீடு ஆய்வில் முனைவர் கலைஞர் ரசித்த கவிஞர் அணைந்தது! முத்துநபியை பாடியஉம் கப்ரு ஒளிரட்டும்! மூலவன் உம்மை பொருந்தட்டும்! முன்பின் பாவங்கள்…

Read More Read More

Visit Us On FacebookVisit Us On Google PlusVisit Us On Youtube